எமது சீனன்கோட்டை ஆரம்பப் பாடசாலை முன்னாள் அதிபர், பஸ்யாலையைச் சேர்ந்த ஜனாபா இஸ்மத் பாதிமா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ. இலைஹி ராஜிஊன்.
அவர் எமது பாடசாலையில் சிறிது காலம் கடமையாற்றிய போதிலும் மிகுந்த ஆளுமையுடன் செயற்பட்டு மாணவ மாணவிகள், பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என சகல மட்டத்தவர்களதும் அபிமானத்துக்கு உரியவராய்த் திகழ்ந்தார்.
ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர் என பன்முக ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று (17-07-2024) புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நமுலுவ ஜும்மாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் இவ்வுலகில் வாழும் காலத்தில் செய்த நல்லமல்களை அல்லாஹ் பொருந்தி, ஜன்னதுல் பிர்தௌஸை நஸீபாக்கி வைப்பானாக.
ஆமீன்.
CHINAFORT 1ST
17-07-2024