இஸ்மதுல் றஹுமான்
சீதுவ, ராஜபக்ஷ மாவத்தையில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் மூன்று முறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் வாய் பகுதி மற்றும் கால்களால் காயம் ஏற்பட்டுள்ளன.
சீதுவ- கட்டுநாயக்க நகர சபையின் தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர் ஒருவரின் 55 வயது தந்தையே துப்பாக்கி சட்டுக்கு இழக்காகியுள்ளார்.
சந்தேக நபர்கள் கைதுப்பாக்கியை பயன்படுத்தியே வெடி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வெடி வைத்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
காயமடைந்தவரிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காயமடைந்தவர் போதைப் பொருளுக்கு எதிராக செயல்பட்ட ஒருவர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சீதுவ பொலிஸாரும் நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பிரிவு பொலிஸாரும் வெவ்வேறான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.