1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், பின்வரும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:
மொத்தக் கூட்டுத் தொகை அடிப்படையிலான வரியை 15% இலிருந்து 18% ஆக உயர்த்துதல்.
இலங்கைப் பிரஜைகளுக்கான கசினோ நுழைவு வரியை 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல்.
இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.