சீகிரியா பொலிஸ் பிரிவிலுள்ள தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி தேக்குமரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் கொட்டில் ஒன்றை அமைத்து சிலர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள் அதே கொட்டிலில் இரவு வேளையில் தங்கி இருந்துள்ளனர். அதன்போதே மேற்படி கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கிருஷ்ணன் ராஜ் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ள, இனாமலுவ பிரதேவத்திலுள்ள அரசுக்கு சொந்தமான மேற்படி தேக்குமரக்காட்டில் உள்ள மரங்களை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. அதே கொட்டிலில் காயமடைந்த நிலையில் இருந்த மற்றும் ஒருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ஜே. எம். ஹாபீஸ்)

July 21, 2025
0 Comment
87 Views