மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் மேல், தென், வடமேல், சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 60-70 கி.மீ வரை அதிகரிக்கலாம்.
இதேபோல், மன்னார் முதல் வாகரை வரையிலான கடற்பரப்புகளில் 50-55 கி.மீ வேக காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. கடல் அலைகள் 2.5 – 3.0 மீ உயரம் வரை மேலெழும்பக்கூடியதால், சில கடற்கரைப் பகுதிகளில் நிலப்பகுதிக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது.
மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவுறுத்தல்களுக்கு அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

July 19, 2025
0 Comment
89 Views