பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் 09.06.2025 திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக 09.06.2025 திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் 10.06.2025 செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.