விசாக பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.05.2025 மற்றும் 13.05.2025 ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கைதிக்கும் போதுமான வகையில், கைதியின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.
இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.