யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைப்பீடத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் நூல் ஒன்று வெளியிடப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீ சற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் மற்றொரு அங்கமாக, கலைப்பீடத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.