( ஐ. ஏ. காதிர் கான் )
பாணந்துறை கவிதா வட்ட தொடர் கவியரங்கின் 11 ஆவது கவியரங்கு, நேற்று (31/08/2025) ஞாயிற்றுக்கிழமை காலை, பாணந்துறை கொரகான கவிதாயினி ருக்ஷானா யஹ்யா வின் இல்லத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கவியரங்கினை கவிதாயினி ருக்ஷானா யஹ்யா தலைமையேற்று நடாத்தினார்.
பாகவத் தலைவர் கவிஞர் கலைமதி யாஸீன், அமைப்பாளர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் ஆகியோர் நிகழ்வுகளை நெறிப்படுத்தினர்.
11 ஆவது கவியரங்கில் கவிஞர்கள் கலைமதி யாஸீன், கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், மஸாஹிரா கனி, ருக்ஷானா யஹ்யா, மௌலவி ஐ.ஏ. காதிர் கான், முனாஸ் கனி, ஏ.எல்.எம். சத்தார், போரதொட்ட இக்பால், பாரிஹா பாரூக், லைலா அக்ஷியா, வாழைத்தோட்டம் வஸீர், கிண்ணியா அமீர் அலி, ஹேனமுல்லை நழீம், பாணந்துறை ஸஸ்னா, பேருவளை திக்ருல்லாஹ் ஆகியோர் கவிதைப் பூக்களால் சபையை அலங்கரித்தனர்.
