இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காலி மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய காலத்தில், சதீஷ் கமகே மற்றொரு நபரின் பெயரில் மூன்று தனியார் வங்கிக் கணக்குகளைத் திறந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பொலிஸ் சேவைகளைப் பெற வந்தவர்கள் மற்றும் பிற குற்றவாளிகளிடமிருந்து சுமார் 1.4 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.