இஸ்மதுல் றஹுமான்
பச்சை சிங்கள இனவாதம் பேசிய கம்மன்பில பிள்ளையானுக்காக முன்னிலையாவது எதற்காக? அவதானத்தை திசை திருப்பும் நோக்கமாக பிள்ளையான் கைது தொடர்பாக கம்மனபில கூற முயற்சிப்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையின் ஒன்றும் கூறவில்லை என்று சொல்வது பூணை பையிலிருந்து பாய்ந்த கதையாகும் என நீர்கொழும்பு பிரஜைகள் முன்னணி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் முன்னணியின் பிரதிநிதியும் காணாமல் போனாரின் ஒன்றிய ஏற்பாட்டாளருமான பிரிட்டோ பிரனாந்து, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேமன் குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நீர்கொழும்பு காரியாலயத்தில் "அதிகாரத்தை பெற்றுப் கொள்வதற்காக செய்த மனிதப் படுகொலை" என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இவ் ஊடக சந்திப்பில் அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் நாம் மக்கள் கருத்தை உருவாக்குவதற்கு எத்தனிக்கிறோம். 71, 83, 89 மற்றும் யுத்த காலத்தில் ஒருவருக்கொருவர் கொலை செய்துகொண்ட குற்றச் செயல்களுக்கு எதிராக பேசாது அமைதியாக இருந்ததன் விழைவாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எமது கதவை தட்டியது.
தாக்குதல்கள் தொடர்பாக பல வழக்குகள் உள்ளன. பிரதான வழக்கில் 23040 குற்றச்சாட்டுகள், 25 பிரதிவாதிகள், 200 மேற்பட்ட சாட்சிகள். பிரச்சினை என்னவென்றால் இந்த வழக்குகளை விசாரித்து முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும். பிரதீப் எக்னலிகொடவின் வழக்கு 12 வருடங்களாக உள்ளன. கடற்படையினர் கடத்திச் சென்ற வழக்கிற்கு 15 வருடங்கள். மேல் நீதிமன்றில் ஒரு நாளும் விசாரிக்கவில்லை.
கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் ரொஷான் சானக்கவை கொலை செய்த வழக்கு, ரதுபஸ்வெலவில் இராணுவம் கொலை செய்த வழக்கு இவை தெளிவான சாட்சியங்கள் இருந்த போதும் நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் விடுதலையானர்கள். இதிலும் அவ்வாறு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். நீதிமன்ற நடவடிக்கைகளின் தாமதம் அங்குள்ள முறைமையினால் எமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வைக்க முடியுமா?.
நாம் ஒவ்வொரு மதமும் 21 திகதி தொடர் ஆர்பாட்டத்தை நடாத்தி மக்கள் கருத்தை உருவாக்க முயற்சிக்கிறோம். மக்கள் கருத்தை கட்டியெழுப்பிவிட்டால் காலத்துக்கு காலம் இந்த நாட்டில் ஏதாவது இடம்பெறுகின்றன. மக்கள் கருத்து நிலைநாட்டப்படாமையே இவ்வாறான செயல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
கோதாபய ராஜபக் வீட்டுக்குப் போனதும் அமைச்சர்கள், அரசு வீட்டுக்குள் போனதும் வழக்கு விசாரணை நடாத்தி அல்லவே. நாம் மக்கள் கருத்தை உருவாக்காவிட்டால் மீண்டும் எமது கதவுகள் தட்டப்படுவதை நிறுத்த முடியாமல் போகும்.
உயிர்த்த ஞாயிறு அன்மிக்கும் போது ஒவ்வொரு பூதங்கள் வெளிவருகின்றன. தற்போது பிள்ளையான், ரணில், கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் பேசப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை யார் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தெரியும். குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களை தூக்கிலிட்டு பயனில்லை. இதனை திட்டமிட்டு வழி நடத்தியவர்களை கண்டறிய வேண்டும். பிள்ளையான் தொடர்பாக விசாரிப்பதற்கு கம்மன்பிலவுக்கு என்ன தேவை உள்ளது. அவர் பச்சையாக சிங்கள இனத்திற்காக முன்நின்றவர். அவர் உள்ளாடை கூட சிங்களம் இனவாதமாகவே அனிந்திருந்தார்.
ரணிலுக்கு முடியாது என்ற பின்னர் கம்மன்பில சட்டதரணி என்று ஏன் முன்வந்தார் என்பதே பிரச்சினை.
பிள்ளையான் எல்ரிரிஈ எதிராக போர்தொடுத்த தேசிய வீரர் என்றால் 89 ல் ஆட்களை கொலைசெய்து அரசாங்கத்தை பாதுகாத்த டக்லஸ் பீரிஸ், உடுகம்பொல தேசிய வீரர்கள் இல்லையா?.
திரிபொலி இராணுவ குழுவுக்கு சஹ்ரானுக்கும் தொடர்பு இருந்ததாக தெளிவான சாட்சிகள் உள்ளன.
சஹ்ரானுக்கு பாதுகாப்பு அமைச்சு ஊடாக மாதாந்தம் வேதனம் வழங்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அரசின் ஊடக பேச்சாளர் கெஹலிய ரபுக்வெல்ல கூறினார். வவுனத்தீவு பொலிஸ் காவலரனை தாக்கி இருவர் கொல்லப்பட்டதை புலனாய்வு பிரிவினர் பிழையாக வழிநடத்தி இது எல்ரிரிஈ அமைப்பு செய்த செயல் என்றனர்.
சஹ்ரானை கைது செய்யும் போது இன்னொரு பூதம் வெளிவந்தது. அதுதான் நாமல் குமார. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் அதிகாரிகளை கொலை செய்யும் செயல் முறை என்றனர். இதற்கும் பின்னால் உள்ள அவதானம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அரச புலனாய்வு துறையினர் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பயங்கரமானது. மறைமுக கரங்கள் இருப்பது தெரிகிறது. அவதானத்தை வேறுபக்கம் திருப்ப முனைகின்றனர்.
பிள்ளையானின் கைதை வேறுபக்கம் திருப்ப கம்மன்பில முயற்சி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாவியை கைது செய்ததாக கூற விளைகிறார். கிழக்கு மாகாண உப வேந்தர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அரை மணிநேரம் பேசி கமம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்தல் தொடர்பாக பிள்ளையான் ஒன்றும் சொல்லவில்லையாம். சட்டதரணியாகச் சென்றால் அவரது கைது தொடர்பாகவே ஆலோசனை வழங்க வேண்டும். பிள்ளையானும் சஹ்ரானும் சிறையில் ஒரே இடத்தில் இருந்ததாக சாட்சியங்கள் உள்ளன. பிள்ளையானின் இணைப்புச் செயலாளர் கூறுகிறார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிறைச்சாலை உள்ளே திட்டமிட்டது என்று.
எனவே அரசாங்கம் கடந்த அரசுகளை போல் நழுவிச் செல்லாமல் உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான அவதானத்தை செலுத்தி உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றனர்.