பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக தற்போது பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இலக்க தகடுகளை பயன்படுத்தி கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் உள்நாட்டில் எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் மாற்றப்படுவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் சில அதிகாரிகளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் இலக்கங்களை மனப்பாடம் செய்து சோதனைகளில் தேர்ச்சி பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோருக்கு மருத்துவ பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரு அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது காட்சிப்படுத்தப்பட்டு அதற்கேற்ப சோதனைகள் நடத்தப்படும்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நுகேகொட மற்றும் வெரஹெர ஆகிய கிளைகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய 24 மாவட்ட அலுவலகங்களிலும் இதே வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.