க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 (2026) இன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை மறுதினத்துடன் (08.01.2026) நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள், https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக தொடர்ந்தும் விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
க.பொ.த (சா.தர) 2025 (2026) விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்பம் கோருதல் கடந்த 2025 டிசம்பர் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 08ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










