(அஷ்ரப் ஏ சமத்)
சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த 28 வயது உடைய ஒருவரை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுற்றுலா போலீசார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்
இன்று 26 ஆம் திகதி எயார் லங்கா விமானம் றியாத்திலிருந்து யு.எல். 266 விமானம் காலை 06.30க்கு கொழும்பை வந்தடையும் விமானம் இதில் சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து -இலங்கை ஊடாக மலேசியா செல்லவிருந்த . சவுதி அரேபியா பிரயாணி விமானம் தரையிறங்கும் தருவாயில் தனது சீட் பெல்ட்டை அகற்றி விட்டு கழிவறைக்குச் செல்ல முற்பட்டுள்ளார்
உடன் செயற்பட்டு இரண்டு எயார் லங்கா விமானப் பணிப் பெண்கள் அவரை தடுத்துள்ளார்கள். அவர் உடன் அப் பணிப்பெண்கள் இருவரையும் கடினமாக தாக்கியுள்ளார்…
.இதனை தனது சீசீரீ கேமராக்கள் மூலம் அவதானித்த விமான ஓட்டி விமானம் தரையிறங்கியதும் உடன் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாருக்கு உடன் அறிவித்து சுற்றுலாப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு சவுதி அரேபியா பிரயாணி உடன் கைது செய்யப்பட்டு முறைப்பாட்டினை பதிவு செய்து அவர் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்
நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்










