தேசிய ரீதியாக இம்மாதம் ( ஆகஸ்ட் )12 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தினம் மற்றும் இளைஞர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான தேசிய இளைஞர் மாநாடு ஆகியவற்றை முன்னிட்டும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் தெளிவூட்டும் நடைபவனி விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 06.08.2025 பி.ப. 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாண நகர பகுதியில் இருந்து ஆரம்பித்த இந்த நடைபவனி யாழ்ப்பாண போதனா வைத்திய வீதியூடாக நகர்ந்து யாழ்மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.