முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியான மதுர விதானகே சர்வஜன அதிகாரத்தின் புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் தேசிய நடவடிக்கைப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை 24.10.2025 முற்பகல் கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தொழில் முனைவோர் திலித் ஜயவீர அவர்களால் மதுர விதானகேவிடம் வழங்கப்பட்டது.
மதுர விதானகே 2011 முதல் 2016 வரை கோட்டை நகர சபையின் பிரதி மேயராகவும், 2018 முதல் 2020 வரை கோட்டை நகர மேயராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், அவர் 2020-2024 காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.










