சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுளின் தடுப்பு மருந்தில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பக்றீரியா கொண்ட அழுக்குநீர் மற்றும் புற்றுநோய் தடுப்பு மருந்தான ரிட்டுசிமெப் (Rituximab) மருந்தில் உப்பு நீரும் மட்டுமே இருந்ததாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மன் ஆய்வுகூடம் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தரமற்ற மருந்துகள் விநியோகம் தொடர்பான வழக்கு இன்று (19) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Colombotimes.net