திருகோணமலை – சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் 1) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் 2) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளாளர்.
சம்பூரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலக்கரி மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அணல் மின்சாரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றால் கூட்டு தொழில்முயற்சி கம்பனியாக நிறுவப்பட்ட Trincomalee Power Company Ltd மூலம் உத்தேச 50 மெகாவோற் கூருய மின்னுற்பத்தி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.