சமாதான நீதவான்களுக்கான (நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை மற்றும் நடத்தைக்கோவை) கட்டளைகளைத் திருத்தம் செய்யதலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் சமாதான நீதவான் பதவிக்கு நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை, முடிவுறுத்துகைக்கான ஒழுங்குவிதிகளை விதிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2360/22 ஆம் இலக்க 2023.11.27 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சமாதான நீதவான்களுக்கான (நியமனம், இடைநிறுத்துகை, இல்லாதாக்குகை, மற்றும் நடத்தைக் கோவை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த ஒழுங்குவிதிகள் திருத்தம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட கட்டளை 2439/34 ஆம் இலக்க 2025.06.04 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

July 2, 2025
0 Comment
63 Views