இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய ஆளுனர் சமந்தா ஜாய் மோஸ்டினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் சிறப்பு சந்திப்பொன்று நடைபெற்றது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரின் அழைப்பின் பேரில், அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் அவர்கள் கலந்து கொண்டனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, சுமூகமான உரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நமது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை வழங்குமாறும், இலங்கை ஏற்றுமதி சார்ந்த தயாரிப்புகளுக்கு அவுஸ்திரேலியாவில் அதிக வாய்ப்புகளை வழங்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.