கொழும்பு
இலங்கையில் பகுதி சந்திர கிரகணமானது எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி இரவு 11:31 மணிக்கு ஆரம்பித்து 29 ஆம் திகதி அதிகாலை 03:56 மணிக்கு முடிவடையும் என வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன்படி பகுதி கிரகணம் பூர்த்தியாக விளங்கக்கூடிய நேரமாகிய ஒக்டோபர் 29 ஆம் திகதி அதிகாலை 01:05 முதல் அதிகாலை 02:22 வரையான காலப்பகுதிக்குள் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுவதைக் காணும் போது அல்லது ஏற்பட்டமை உறுதியாகும் போது கிரகணத் தொழுகை, துஆ, இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற ஸுன்னத்தான இபாதத்துகளில் தமது பகுதி மக்களை ஈடுபடுத்தும் விடயத்தில் மஸ்ஜித் இமாம்கள், அப்பகுதி ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு கேட்டுக் கொள்கின்றது.