( ஐ. ஏ. காதிர் கான் )
‘வலம்புரி’ கவிதா வட்டத்தின் 102 ஆவது கவியரங்கு, (20.07.2024) சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். பொருளாளர் ஈழகணேஷ் வரவேற்புரையையும், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நன்றியுரையையும் வழங்கினர்.
எம்மை விட்டும் மறைந்த மூத்த இலக்கியவாதியான கவிஞர் எஸ். முத்துமீரான் அவர்களுக்கும் கவிஞரும், பாடசாலை அதிபருமான இஸ்மத் பாத்திமா அவர்களுக்குமான பிரார்த்தனையும் இடம்பெற்றது.
‘சந்தக் கவிமணி’ கிண்ணியா அமீர் அலி தலைமையில் சுவையாக நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் ஏ. சிவகுமார், எஹலியகொட முஸ்னி முர்ஷித், எஸ். தனபாலன், எஸ். யூ. கமர்ஜான் பீபி, வாழைத்தோட்டம் எம். வஸீர், எம்.ஏ. ரஹீமா, இ. கலைநிலா, பிறைக்கவி முஸம்மில், இறைஞானக்கவி ரமீஸ், கம்மல்துறை இக்பால், மலாய்கவி டிவாங்ஸோ, எம்.எஸ். அப்துல் லதீப், எஸ். அருணன், ரவூப் ஹஸீர், ந. தாமரைச் செல்வி, கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ், அருந்தவம் அருணா, பரீஹா பாரூக் இம்தியாஸ், சிந்தனைப்பிரியன் முஸம்மில், ஆர். தங்கமணி, ஏ.கே. இளங்கோ, வெளிமடை ஜஹாங்கீர், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் ஆகியோர் கவிதை மழைகளைப் பொழிந்தனர்.
வலம்புரி கவிதா வட்டத்திற்கான புதிய “பெனர்”ருக்கான அனுசரணையை,
கவிஞரும் பொறியியலாளருமான நியாஸ் ஏ. சமத் வழங்கியிருந்தார். கவிஞரும் ஓவியருமான ராஜா நித்திலன் அதனை வடிவமைத்திருந்தார்.
இதன்போது, கவியரங்களுக்கு மேலதிகமாக கவிதைகள் பற்றிய உரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் முதல்படியாக, “வலம்புரி கவிதா வட்டம்” தனது நூறாவது கவியரங்க விழாவிலே வெளியிட்ட “வகவக் கவிதைகள்” நூலுக்கான நயவுரை நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
எம்.சி. முஹம்மத் அலி, எம். தியாகராஜா, தில்லைராஜன், அமல் பாண்டி, எம்.எச்.எம். நசீர், சு. ஜெகதீஸ்வரன், நூருல் அயின் ஹுசைன், எம்.பீ.எம். சித்தீக், எம்.எம். நவாஸ்தீன், கவிதா இளங்கோ, தமிழ் இளங்கோ, நுஷ்ரத் அலி, டி.ஜே. கௌதம் போன்றோர் சபையை வண்ண மலர்களால் மெருகூட்டினர்.
( படங்கள் – முஹம்மத் நசார் )