சட்டவிரோதமாக நாட்டிற்குள் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களை கடத்த முற்பட்ட ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் இன்று (5) அதிகாலை 05.25 மணிக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் ஊடாக டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 30,000 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










