சட்டவிரோதமாக உரித்தாக்கப்பட்ட 25 வாகனங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், விசாரணைகளின் போது பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாகப் பதிவு செய்தல் மற்றும் போலி ஆவ ணங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஒன்று சேர்த்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலான நபர்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.