சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்து, விசா காலாவதியான பிறகும், கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, ஒன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த 21 இந்திய பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் இன்று (18) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவர்களை இந்தியாவிற்கு உடனடியாக நாடு கடத்துவதற்காக வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

July 18, 2025
0 Comment
13 Views