எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே 10.06.2024 விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் பிரதிச் செயலாளர் சி. வி. கே. சிவஞானம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.