சகவாழ்வு பசுமை சைக்கிள் சவாரி நிகழ்வு கடந்த 04 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்சவாரி இலங்கை முழுவதும் காணப்படும் சுற்றுலா தலங்களை உள்வாங்கியதாக ஜூலை 15 ஆம் திகதி வரை நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமை சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுதல், இனங்களுக்கு இடையே சகவாழ்வை கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கையில் காணப்படும் சுற்றுலா கைத்தொழில் உலக சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடுவதே இதன் நோக்கமாகும்.
இந்த சவாரி ஸ்ரீ ஜவதனபுர கோட்டை பிரதேச செயலகம், நீதி அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது