ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.04.22
ஸாஹிராவின் 2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கோப்பை நொக் அவுட் அடிப்படையில் வித்தியார்த்த கல்லூரியுடனான காலிறுதிக்கு முந்தைய போட்டியுடன் எப்ரல் 26ஆம் திகதி தொடங்க இருப்பதை முன்னிட்டு போட்டி தொடர்பான விளக்கத்தையும் ரி சேர்ட் மற்றும் அனுசரணையாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் மாநா கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ரக்பி பாரம்பரியத்தை கொண்ட ஸாஹிரா கல்லூரி 2025 பாடசாலை ரக்பி சீசனில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தை அடைய தயாராகி வருகின்றது.கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து முதல் 6 இடங்களில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டு ஸாஹிரா அணி புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்இ உறுதிப்பாடு மற்றும் இன்னும் உயரத்திற்கு ஏற வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் புதிய போட்டித் தொடரில் லுக்மான் நதீம் தலைமையிலான ஸாஹிரா ரக்பி அணி முன்னாள் இலங்கை சர்வதேச வீரரும் சம்பியன்சிப் வென்ற பயிற்சியாளருமான ராதிகா ஹெட்டியாராச்சியின் நிபுணத்துவ வழகாட்டுதலின் கீழ் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.