கொழும்பு-கண்டி வீதியில் உள்ள தித்வெல மங்கட பகுதியில், இலங்கை போக்குவரத்து சபை பஸ் – டிப்பர் லொறி மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் பிக்கு ஒருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ், கண்டி நோக்கிச் சென்ற டிப்பர் லொறியுடன் மோதியதில் பஸ் வீதியை விட்டு விலகி ஒரு கடையருகே நின்றது.
பஸ் தவறான பாதையில் சென்று எதிர் திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

July 21, 2025
0 Comment
11 Views