கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் மூன்றாவது தடவையாக நடாத்தப்படும் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி ஜனவரி (26.01.2025) ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அங்கம்பிட்டிய விளையாட்டரங்கில் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களைக் கொண்ட 6 அணிகள் கலந்துகொள்ளும் இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் காலை 8.30 மணிக்கு ஆரம்ப வைபவம் பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.ஆரம்ப வைபவம் நடைபெறவுள்ளதுடன், அரசியல் கட்சித் தலைவர்கள், வீரர்கள், கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினர் உட்பட பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது.
January 25, 2025
0 Comment
15 Views