கொழும்பின் – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவ பிரதேசத்தின் ஒரு பகுதி 28.05.2024 சில மணித்தியாலங்களுக்கு மூடப்படும் என கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 28.05.2024 காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையும் இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரையும் குறித்த வீதிப் பகுதியளவில் மூடப்படும் என கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மரத்தின் அருகில் இருந்த இரண்டு பாறை கற்கள் தளர்வாகியுள்ளதால் அந்த இடத்திலிருந்து பாறைகளை அகற்றுவதற்கு இந்த வீதியை மூட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.