இஸ்மதுல் றஹுமான்
மிணுவன்கொட பிரதேச சபையினால் கொங்ரீட் போட்டு சீறமைப்பு செய்த வீதியை சில மணிநேரங்களில் கும்பல் குழுவொன்று சேதமாக்கியுள்ளதாக மிணுவன்கொட பிரதேச சபை தலைவர் (தே.ம.ச.) அசங்க சன்ஞீவ தெரிவித்தார்.
பிரதேச சபையினால் 2024 ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதி மூலம் மிணுவன்கொட, வீதியவவத்த, தொலாகத பிரதேசத்தில் பாதுராவத்த வீதியை கொங்ரீட் இட்டு செப்பநிட்டு அபிவிருத்தி செய்ததாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
சில மணி நேரங்களில் கொங்ரீட் போடுவதற்காக இரு பக்கமும் பொறுத்தப்பட்டிருந்த பலகைகளை உடைத்தெறிந்து போடப்பட்ட கொங்ரீட் மீது நடந்து அட்டகாசம் செய்துள்ளனர்.
இந்த வீதியில் பொறுத்தப்பட்டுள்ள சீசிரிவி கமராக்கள் ஊடாக சந்தேக நபர்களை அடையாளம்காண நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒதுக்கப்பட்ட நிதி மூலம் பாதையை சம்பூரணமாக கொங்ரீட் போட முடியாததினால் விதியின் ஒரு முனையிலிருந்து ஆரம்பித்து முடியுமானவரை போட்டுள்ளனர். இதனை மறு முனையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அம்முனையில் உள்ளவர்கள் கேட்டிருந்ததாகவும் இது அரசியல் கண்ணோட்டத்தில் இடம் பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் நிழவுகின்றன.
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை மூலம் சேத விபரம் மதிப்பிடவுள்ளது.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.