உலக பாதாளக் குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினதும் அவரது குடும்பத்தினரதும் வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் வங்கிக் கணக்குகளை பரிசீலித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










