முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் ரிட் ஆணையை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.










