இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் சாரதி உட்பட 81 பேர் பயணத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 பேர் மரணித்த இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனையில், பேருந்தில் இயந்திரக் குறைபாடுகளும் இல்லை என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், சிரேஷ்ட மோட்டார் வாகன பரிசோதகர்களை கொண்ட ஒரு விசேட குழு இந்த விபத்து குறித்து மேலும் விசாரணைகளை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அத்துடன், விபத்தில் காயமடைந்த 43 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் 17 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் கொஸ்லந்த, திஸ்ஸமஹாராம, பேராதனை, மொனராகலை, லுனுகம்வெஹெர, பன்னில மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.