கொழும்பு – குவைத் நாட்டின் 65வது தேசிய தினம் மற்றும் 35வது விடுதலை ஆண்டு விழாவுக்கான பிரமாண்டமான கொண்டாட்டங்கள் பெப்ரவரி 9 திங்கட்கிழமை city of dream இல் உள்ள cinnamon life அரங்கில் நடைபெற்றது.
குவைத் மாநில விவகாரங்களுக்கான பொறுப்பாளர் அப்துல்லா அஹ்மத் அல்முஹானாவின் தலைமையில் இது நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதம விருந்தினராக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நாலிந்த ஜயசிங்க மற்றும் குவைத் இராஜாங்க அமைச்சர் அப்துல்லா அஹ்மத் அல்முஹானா கலந்து கொண்டு ஆண்டு நிறைவு கேக்கை வெட்டி விழாவை சிறப்பித்தார். மேலும் குவைத் இராஜாங்க அமைச்சர் அப்துல்லா அஹ்மத் அல்முஹானா அமைச்சருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் முனீர் முலாஃபர், முஸ்லிம் சமய விவகாரத் துறை இயக்குநர் எம்.எஸ்.எம். நவாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். – புகைப்படங்கள் எம்.எஸ். மற்றும் ரோமானா சலீம்.










