தேசிய விலங்கு கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நாட்டில் உள்ள குரங்குள் எண்ணிக்கை 5,197,517 மர அணில்கள் 2,666,630 மயில்கள் 4,285,745 இருப்பதாக தெரியவந்துள்ளது என விவசாய துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் ஐம்பது சதவீதம் மட்டுமே உண்மை என்று அடையாளம் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கணக்கெடுப்பின் மூலம், பிரதேச செயலக மட்டத்தில் வனவிலங்குகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களைக் கண்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஒருங்கிணைப்புக்காக அரசாங்கம் சுமார் ரூ. 3 மில்லியன் செலவிட்டதாக அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்










