ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.02.04
பொரல்ல அஹதிய்யாவும் இஸ்லாமிய கல்வி நிலையமும் குப்பியாவத்தை அல் ஹிஜ்ரா வித்தியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வு குப்பியாவத்தை அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்றலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அஹதிய்யா பாடசாலை அதிபர் சிப்லி ஹாசிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அல்ஹிஜ்ரா பாடசாலை அதிபர் திருமதி ஜெஸ்மின் பிஸ்ருல் ஹாபி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். வரவேற்புரையை அஹதிய்யா அதிபர் ஷிப்லி ஹாசிமும் பிரதம அதிதி உரையை ஜெஸ்மின் பிஸ்ருல் ஹாபியும் விஷேட உரைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர்களான அஹமட் முனவ்வர், ஏ.எஸ்.எம்.ஜாவித் ஆகியோர்கள் உரையாற்றினர்.
இதன் போது தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் ஊடக செயலாளர் முஸாரிப் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


