( ஐ. ஏ. காதிர் கான் )
“கிறேட் மைன்ஸ்” கெம்பஸின் வருடாந்த பட்டமளிப்பு விழா, கெம்பஸின் தலைமை நிறைவேற்று அதிகாரி பஸ்லான் ஏ. காதர் தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மூன்று மாத சுய முன்னேற்ற பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மற்றும் உளநல விழிப்புணர்வு பயிற்சிகளை மேற்கொண்ட தெரிவு செய்யப்பட்ட 67 மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, பண்டாரகம அடுலுகமயைச் சேர்ந்த மாணவன் அப்ஸல் பைரூஸ், மாணவி பாத்திமா திக்ரா ஆகியோரும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இம்மாணவர்கள், அடுலுகமயைச் சேர்ந்த முஹம்மது பைரூஸ் – ஜென்னத்துல் பாத்திமா தம்பதியினரின் புதல்வரும் புதல்வியுமாவர்.









