சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதி சமிக்ஞை கம்பத்தில் மோதி, அருகில் இருந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்த விபத்தில், காரின் சாரதியும் அதில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொரு பெண் பகமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பகமுன பொலிஸ் பிரிவின் நாவுல-எலஹெர வீதியில் உள்ள அலிகந்த பகுதியில் நேற்று (10.03.2025) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த சாரதி கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த பெண்ணும் காயமடைந்த பெண்ணும் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆவணங்களும் கிடைக்காத நிலையில் காரை தரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சடலங்கள் பகமுன வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பகமுன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.