அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (09) காலை 6 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் உப்புல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை நாசப்படுத்த விவசாய அமைச்சின் செயலாளர் தொடர்ந்து முயற்சிப்பதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது.