பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து 5.941 கிலோ எடையுள்ள 24 கரட் (k) தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 54 வயதுடைய ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த தங்க பிஸ்கட்டுக்களை தனது காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மதிப்பு ரூ.210.5 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

September 14, 2025
0 Comment
128 Views









