காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியதற்காக முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று விற்பனை நிலையங்களுக்கு தலா ரூ. 200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்த விற்பனை நிலையங்களில் சோதனைகளை நடத்தியதாகவும், பின்னர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த பல்பொருள் அங்காடிகளின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று அதிகாரசபை வலியுறுத்தியது.
