இஸ்மதுல் றஹுமான்
காது கேற்காதவர்களுக்கான "என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சேஜரி"
(Endoscopic eustachian tube surgery) எனும் சத்திர சிகிச்சை இலங்கையில் முதன் முதலாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றது.
இச் சத்திர சிகிச்சையை காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வித்யாநிதி டாக்டர் ரிஸ்னி சக்காஃப் செய்தார்.
58, 47, 11 ஆகிய வயதுடைய மூவருக்கு இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றன.
சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காப் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் காது கேட்காதவர்களுக்கான புதிய சத்திரசிகிச்சை முறையை நான் இன்று முதன் முதலாக இலங்கையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறிமுகம் செய்துவைத்தேன். அது "என்டொஸ்கொபி
யுஸ்ட்ச்ஷியன் டியுப் சேஜரி"
(Endoscopic eustachian tube surgery) எனும் சத்திர சிகிச்சையாகும்.இதற்கு முன்பு காது கேற்காதவர்களுக்கு அவர்களின் காதில் அடைபட்டுள்ள சலி, சீல் போன்றவற்றை அகற்றுவதற்காக செவிப்பறையில் ஒரு துவாரத்தை இட்டு அதனூடாக அகற்றபொபடுகின்றன. இதனால் செவிப்பறை பழுதடைகின்றது.
இந்த புதிய முறையின் மூலம் மூக்குத் துவாரத்தின் ஊடாக கமராவை அனுப்பி காதுக்குழி குழாய் மூலம் சலி, சீல் என்பன அகற்றப்படுகின்றன. இச் சத்திர சிகிச்சைக்கு சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் என்றார்.
இதனைச் செய்வதற்காக என்னுடன் உதவி வைத்தியர், நினைவு இழக்ச்செய்யும் இரு வநத்தியர்கள், இரண்டு வாதிகள், இரு ஊழியர்கள் அடங்கலான குழுவினர் உதவி செய்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் இந்த சத்திர சிகிச்சை இலங்கைக்கு முதல் முறை என்றாலும் எனக்கு இது முதலாவது அல்ல. இதற்கு முன்பு நான் இங்கிலாந்து நாட்டில் இவ்வாறான பல சத்திர சிகிச்சைகள் செய்துள்ளேன்.
இச் சத்திர சிகிச்சையை சத்திர சிகிச்சை நிலையங்களில் அன்றி வெளி நோயாளர் பிரிவிலும் நினைவு மாற்றாமல் மறக்க வைப்பதன் மூலமும் செய்ய முடியும். இதன்மூலம் செலவுகளையும் நேரங்களையும் மிகுதப்படுத்த முடியும்.
நீர்கொழும்பு வைத்திய சலையில் இதனை அறிமுகம் செய்வதற்காக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் புஷ்பா கம்லத் எனக்கு பாரிய பங்களிபபை செய்தார்.
இதற்கு முன்பும் இவ்வாறு மூன்று சத்திரசிகிச்சைகளை இலங்கையில் அறிமுகம் படுத்திய உள்ளேன்.
கழுத்திலுள்ள தைரோய்ட்டை கழுத்தை வெட்டாமல் வாய் ஊடாக அகற்றுவதை 2019ல் குளியாபிட்டிய வைத்திய சாலையிலும், 2020ல் ஹோமாகம வைத்திய சாலையில் தொண்டையில் உள்ள புற்றுநோய் கட்டியை அல்ட்ரா சவுன்ட்ஸ்" மூலம் நீக்கினேன்.
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் கடமை புரியும் போது 3டீ முறையில் கழுத்தில் சத்திர சிகிச்சை செய்தேன். இவற்றிற்காக எனக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது என்றார்.










