வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று (15) செவ்வாய்க்கிழமை கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். மன்னாரில் செயற்படும் ஒரு தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்த அவர்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதேவேளை, வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனரென்று தெரிவிக்கப்படுகின்றது.