உலகின் மிக மோசமான தொற்று நோயாகக் கருதப்படும் காசநோயால் 2024ஆம் ஆண்டில் உலகளவில் 1.23 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த எண்ணிக்கை கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் குறைவு என்று அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு உலகளவில் 10.7 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 5.8 மில்லியன் பேர் ஆண்கள். 3.07 மில்லியன் பெண்கள். மற்றும் 1.02 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.
காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுள் 25 சதவீதமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
காசநோய் பரவுவதைத் தடுப்பதிலும் அதற்கு சிகிச்சையளிப்பதிலும் சரியாக கவனம் செலுத்தப்படாதது நோய் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.










