( ஐ. ஏ. காதிர் கான் )
சென்னை — கன்னிமாரா நூலகப் புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த “காலங்கள் பேசும் காவியங்கள்” என்னும் 11000 கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூல் உள்ளிட்ட புத்தகக் கண்காட்சி, நேற்று (12.01.2025) ஞாயிற்றுக்கிழமையுடன் சிறப்புற நிறைவு பெற்றது.
“கவிதைக்களம் காவிபாவை குழுமம்” சார்பாக வைக்கப்பட்டிருந்த இந்த 11000 கவிதைத் தொகுப்பு நூல் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், “வசந்தா பதிப்பகம்” பதிப்பாளர் முனைவர் மோ. பாட்டழகன்.”
“இளவரசி” மாத இதழ் ஆசிரியர் எழுத்தாளர் சங்கமித்திரை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ். அகிலன், கவிஞர் ஆனந்தி துறைவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
“கவிதைக்களம் – கவிபாவை குழுமம்” சார்பாக, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்நூலின் தொகுப்பு ஆசிரியர் “கலைமாமணி” கவிபாவை கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.