களுத்துறை மாவட்டம், களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, வாத்துவ போன்ற பகுதிகளில் நாளை (05) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களுத்துறை நீர் வழங்கள் அமைப்பின் பராமரிப்பு பணிகளின் காரணமாக இந் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.