அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் 28.06.2024 வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுத்த சுகவீன விடுமுறை போராட்டம் வெற்றி அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.