(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக நிவாரண விநியோகப்பணியின் 05 ஆம் கட்டமாக அனைத்துப் பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள், உலமாக்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ஊர் மக்களினால் கிடைக்கப்பெற்ற அன்பளிப்புப் பொருட்கள் அவசரத் தேவையாகக் காணப்பட்ட பொலன்னறுவை மற்றும் மாணிக்கம்பிட்டிய மக்களுக்கு மாணிக்கம்பிட்டிய ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கிராம சேவகரின் ஆலோசனைகளுக்கமைய 11.12.2025 வியாழக்கிழமை முறையாக விநியோகிக்கப்பட்டன.
அத்துடன் நிவாரண விநியோகப் பணியின் 06 ஆம் கட்டமாக பொலன்னறுவை திவுலானப் பிரதேச சிறுவர்களுக்காக பால்மா, Diappers உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் திவுலான அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதின் ஆலோசனைகளுக்கமைய பிரதேச மக்களுக்கு கையளிக்கப்பட்டன.
அத்தோடு,
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட மூதூர் பால நகர் பகுதி மக்களுக்கு ஜாமிஉல் அல்பர் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைத்து அங்கு முக்கிய தேவையாகக் காணப்பட்ட குடிநீர் உட்பட்ட நிவாரணப் பொதிகளும் நேற்றைய தினம் (11) கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தேவையறிந்து உடனடியாகச் செயற்பட்டு உதவி செய்த கல்முனை வாழ் மக்கள் உட்பட உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் இதன்போது தமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளனர்.










